என் பணி
நான் சுதந்திரமானவன்
அதனால்தான்
சுதந்திரமாய் எழுதுகின்றேன்
சுதந்திரமானவன் என்பவன்
அடுத்தவனின்
சுதந்திரத்தில் கைவைப்பவன்
அல்ல
சுதந்திரமானவனை
யாராவது அடக்க
நினைத்தால்
தானாகவே அவர்கள்
அடங்க நேரிடும்
தப்பை வைத்துக்கொண்டு
தாமாகவே
குப்பையையும் பிடித்துக்கொண்டு
தான் நினைத்ததையும்
நாடகமாய் நடத்திக்கொண்டு
வெள்ளை அடிக்கப்பட்ட
கல்லறைகளாய்
வாலாமணி போட்டுக்கொண்டு
வலம் வரும் .......
இவர்கள்
நீதிமான் என்று பறைசாற்றினாலும்
இவர்களும் அணியாயக்கரர்களே !
இப்படியானவனை
விடாமல் துரத்துபவன் நான்
எனக்கு ஒருவகையில்
இதுவும் ஒரு பணிதான்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen