Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Sonntag, 24. Juli 2016

யாருக்கு தேவை ? Who needs ?




Who needs ?
இன்றைய காலமதில் 
பணத்துக்காக 
குணத்தை 
இழந்து விட்டவர்கள் 
அனேகர் 

பணம் எல்லோருக்கும் வேண்டும் 
ஆனால் என் குணம் 
யாருக்கு வேண்டும் என ?
என் முத்தான வரிகளை 
வித்தாக 
முதல் முதலில் பதித்தவன் 

கடல் கடந்து வந்தவர்கள் 
இதை கண்ணியமாக கவனிக்கவில்லை 
கரிசனையும் கொள்ளவில்லை 
சமாதானம் இல்லாமல் 
சமாதானம் செய்து விட்டார்கள் 

உறவு பந்தம் பாசம் 
என்பது உண்மைதான் 
உண்மை இல்லாத 
பந்தபாசம் யாருக்கு தேவை ?
 தேவையா ?



கவிஞர்  கல்மகன் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி 





Refugee - அகதி - நாடிழந்தவர்



அகதி  -  நாடிழந்தவர் 


குனிந்த வாழ்வு
குடியேறிய
பரதேசி வாழ்க்கை
சகல நாட்டிலும்
பரிதாபம் ...........

சுமை கலந்த வாழ்வு
பிறந்த நாட்டைவிட
புகுந்த நாட்டில்
வாழ்ந்த காலங்கள்
அநேகம் ............

ஆயிரம்  ஆயிரம்  வாழ்கை  கனவுகளை
சுமந்த எனக்கு
யுத்தம் என்னும் கொடூரத்தால்
சத்தம் இல்லாமல் என் கனவுகளும்
தொலைந்து விட்டது ...............


பரதேசி வாழ்வில்
பிறந்த நாட்டுக்கா
புகுந்த நாட்டுக்கா
நான் சொந்தக்காரன் ...........

கண் அயரும் நேரமதில்
கனவுகளும் மீண்டும் வந்தாலும்
காலமும் வயதுகளும்  கடந்து
வாலிபமும் மறைந்து விட்டது ..

மன  வலிகள்  அதிகரித்து
மன உளட்சல்  பெருக்கெடுத்து
அங்கும் இல்லாது  இங்கும்  இல்லாது
ஊஞ்சல் ஆடும் என் உள்ளம்
யாரறிவார் ?

சொந்த நாடு  சுகமாய் இருந்தால்
கூனி  குறுகி  குனிந்த வாழ்வு
எந்த நாட்டிலும் எனக்கு
அவசியம் இல்லை .........

நாடு நாடாய்  அலைந்து திரிந்து
நிம்மதி  என்ற பெயரில்
ஓரிடம்  நிலைத்து வந்தாலும்
வாழ்வும் ஒரு சாவே ..........


உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி


Montag, 13. Juni 2016

என் விழிகள்




என் விழிகள்
மயங்கி  விடாது
ஒரு நாளும் தூங்காது
நான் ...
துயரமான போதும்
துணிவாய் இருக்கும்

என்னை யார்  என
அறியாமல் பேசுவது
நீ தூற்றுவது
நீ  இன்னும் ....
தெய்வத்தை  அறியவில்லை
உனக்கு இன்னும்
அறிவு வளரவில்லை
என்பதுதான் உண்மை

நான் இருக்கும் வரையிலும்
என் விழிகள்
என்னோடு  கூடவே
இருக்கும்
என் விழிகள்
மயங்கி  விடாது
ஒரு நாளும் தூங்காது

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட் ஜெயந்தன் அப்புக்குட்டி 


Donnerstag, 17. März 2016

என் பாதை



பல தோல்விகளை 
கஷ்டமாக கடந்து வந்தவன்
சில வெற்றிகளை
இலேசாக
ஜெயமாக  கொண்டவன்

என் வாழ்வில்
தோல்விகளை 
வெற்றியின்
படிக்கட்டுக்களாகவும்
பள்ளிக் கூட
புத்தகங்களாகவும்
புரிந்து  கொண்டவன்

என் பாதை
சரியான பாதை தான்
அதை
உணர்ந்து கொள்ளும்
 யாவரும் 
காலம்
ஒரு நாள் வரும்

நீ
உன்  கண்களால் 
ஒரு நாள் பார்ப்பது 
நிட்சயம்
நான்  மெதுவாக  ஓடினாலும்

அதை 
சிலர் அதைக் கண்டு
வேகமாக ஓடுகின்றனர்


நடப்பது என்ன என்பதை
முன் கூட்டிய
முற்றாக சொல்லி விட்டேன்
ம்பி
பல  புயல்களை கடந்து வந்தவன்
வெற்றி
என்பது என் வாழ்வில்
நிட்சயம்

யாருக்காகவும் யாரையும்
வெறுக்காதவன்
அநீதிக்கு  துணை  போவர்களை
கண்டிப்பவன்
திருந்தாவிட்டால்

என்பாதை தனிப்பாதை
என்பதை பல தடவை 
பகிரங்கமாக 
சொல்லியும் உள்ளேன் 

உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Mittwoch, 2. März 2016

புதினம்




puthinam



ஏமாறாதே





 ஒருத்தனை
தொடர்ந்து
நீ
ஏமாற்றும்போது
அவன்
அப்பாவிபோல் இருந்தாலும்

ஒரு நாள்
சீறிப் பாய்ந்து
சிங்கம் போல்
மாறிவிடுவான்

 ஒருவனை
ஏமாற்றும்போது
ஏமாறுவது  அவன் அல்ல
நீதான் என்பதனை
மறந்து விடாதே !

அத்துடன்
ஒருத்தனை நீ ஏமாற்றும்போது
பலர் உன்னை  ஏமாற்றுவார்கள்
இதையும் மறந்து விடாதே

உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Dienstag, 1. März 2016

A. சாமியார்

கடல் கடந்து வந்த
சாமியார் 
குடும்ப பக்தர்களை 
சந்திக்க வந்தாராம் 

நீண்டகாலம்  
லங்காவுக்கு வராததால் 
பலரை கண்கலங்க வைத்த 
கடற்கரை சாமியாரோடு 
இணைந்த பாசம் வெளிப்பட்டதாம் 

கரும்பு சாமியார்  இடம் கொடுக்க 
கடை சாமியார்  புதினம் பாத்தாராம் 
அட என்னடா என  
ஆஸ்பத்திரி  சாமியார்  அதிர்ந்து போக 
கரும்பு சாமியார் இரும்பாகி  போனாராம் 

வாழ்வும் இல்லை 
சாவும் இல்லை என்றாராம் 
வளர்ந்த சாமியார் 
அட ஆண்டவன் படைப்பில் 
இப்படியும் அதிசயங்கள் 

கடல் கடந்து வந்த சாமியார் 
சட்டு சுட்டன்று 
கடுகதி  பஸ்  எடுத்து பறந்தாராம் 
வடையை காக்கா கொண்டுபோய் விட்டதாம் 
உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Mittwoch, 24. Februar 2016

முகவுரை


கல்மகன் கவிதைகள் 

tamil
கவிஞர்  கல்மகன் 



                                       
                        

அன்பானவர்களே !
இவ் புதுக்  கவிதைகள்  என் உள்ளத்துக்கு சொந்தமானவைகள்  

என் இதயத்தின் உள்ளான ஆழத்தின் அருவிகள் புதைந்து கிடந்த புது வாழ்வுகள்,  புரட்சிகதிர்கள் ,ஆறுகள் ,குளங்கள், மலைகள் ,பள்ளங்கள் 
திட்டிகள் , பட்டிகள்  , படிகள் , பாரங்கள் , துன்பங்கள் , இன்பங்கள் ,துயரங்கள் அனுபவங்கள் புனிதங்கள் பனிகள் மழைகள் வெயில், நீராவிகள் உறைந்த மழைகள் விருப்புக்கள் வெறுப்புக்கள் அழுகைகள் ஆத்திரங்கள் அன்புக்கள் உணர்வுகள் உணர்ட்சிகள் உட்சாகங்கள் கோவங்கள் கொடுமைகள்  விடியலை தேடிய வெள்ளை புறாக்கள் தரிசனங்கள் இலக்குகள் 


எண்ணி அடங்கா யாவையும் சேர்த்து  புது விதையாக எனக்கு தெரிந்த இன்னும் நினைவில் உள்ள  என்னை சுற்றி நடக்கின்ற நடந்த நடக்கபோகின்ற  சம்பவங்களை அனுபவங்களை பதிவு செய்கின்றேன் கவிதையாக எழுதுகின்றேன்,

 இதற்கு இலக்கியமோ இலக்கணமோ கிடையாது பலர் கவிஞர் என்று எழுதுங்கள் என அறிவுரை  சொன்னார்கள் கூறினார்கள் என்பதற்காகவே   கவிஞர்  என்று குறுப்பிடுகின்றேன் கல்மகன் என்பது  (சிறுவயதிலும் இளம் வயதிலும் கவிதைகள் ஆக்கங்கள் கட்டுரைகள் எழுதியதால் எனக்கு கிடைத்த புனைப்பெயர் )  உங்கள் கருத்துக்கள் எனக்கு உற்சாகம் தருகின்றது வளர்வதற்கும்  வழிகாட்டுகின்றது .

மற்றும் மேலும் பற்பல விடயங்களை 
அனைத்தையும் சேர்த்து புதியதோர் உலகில் புதைத்து வைக்காமல் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்
பிழைகள் இருப்பின் மன நிறைவு காண்க
உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

வாழ்க்கை

 poem
உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

புதிய இதயம்






புதிய  இதயம் 
அடைபட்ட  இதயம்
மீண்டும்
துடித்தது
எனக்காக அல்ல
என் குடும்பம்
உறவுகள்  நண்பர்கள்
பிராத்தனைக்காக !


என் இதயம்
அடைபட்டு
துவண்டு போனபோது
துணிவுடன்
போராடியவள்
என் மனைவி

என் மகனின் அன்பும்
என் மகளின் ஆறுதலும்
அசைக்கமுடியா நம்பிக்கையை
உண்டு பண்ணியதால்
துவண்டு போகவில்லை

எதற்காக
மீண்டும் எழுந்தேன்
என்பதை
தொலைவில் இருந்த நண்பர்
துணிந்து  சொன்னார்

பல பனி மலைகளை
உடைத்து
பாதை  காட்டி
பக்குவ படுத்தி
பதறாதே  என்றீர்

உங்கள் கண்ணீர்கள்
தியாகங்களும் உதவிகளும்
என்றைக்கும் எனக்கு
இரண்டாவது
புதிய அத்திவாரம்தான்

என் இதயம் இருக்கும் வரை
இயங்க சொன்னவருக்கு நன்றி

உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

நேர்மை /நீதி /ஆசிரியை


அறிவுள்ள 

அறிவுள்ள ஆசிரியைக்கு
எனது  
அன்புக் கடிதம் 
அநியாயத்துக்கு 
துணை போவதும் 
நேர்மைக்கும் நீதிக்கும் 
எதிர்ப்பதும் ஏன் ?

அப்படியானால் 
பாடசாலைகள்  
அறிவை வளர்க்குமிடம் 
உங்களின் 
அநியாய 
பக்க சார்வு கொள்கைகள்  
மாணவர்களை 
பாதிக்குமா ?

என் கேள்விக்கு 
அறிவுள்ள 
அன்பான 
ஆசிரியையே 
பதில் 
மட்டுமல்ல 
அநியாயத்துக்கு 
துணை போகாதே 
என்பதும் 
வேண்டுகோளுங் கூட 
வருங்கால  சந்ததிக்கு
என்ன பதில்
சொல்லப் போகின்றீர்கள் 

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி




அள்ளிவிடு




அள்ளிவிடு
உன் முகத்தை
ஆயிரம் தடவை
பார்த்த எனக்கு
மீண்டும் ... எப்போது
வருவாயென
கார்த்திருந்து  பார்த்திருக்கின்றேன்
வந்தவிட்டு .......
 என்னை கண்டு விடு 

என் மனதிற்கும் 
உனக்கும் 
தொடர்பு உண்டா
சொல்லிவிடு
தூக்கத்தில்
நித்திரையை 
தினமும் தொலைக்கின்றேன்
சொல்லிவிடு  இல்லையேல்
என்னை கிள்ளிவிட்டு 
அள்ளிவிடு 

நட்பே...  யார் நங்கள்
தண்ணிரில் தாமரையா
தவழ  இடம் கொடுத்த
தண்ணிரா?
சொல்லி விடு
பதில் தந்துவிடு

என்னருகில் நின்ற
நட்பே ..
நகர்ந்து சென்றதும் ஏன் ?
பார்க்க துடிக்கின்றேன்
ஆனால்
பாதியில்
என் கண்கள் விழித்துவிட்டது
தொலைத்ததுதான்
நட்பைமட்டுமல்ல
என் பாதி 
தூக்கத்தையும்   கூட

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
 டேவிட்




Dienstag, 23. Februar 2016

ஐயோ



இலவசமாக  ஒருத்தர் 
அன்பளிப்பு 
செய்துவிட்டார் 
என்று சொல்லி 
அத்துமீறி 
பலாத்கரமாக 
புத்திசாலிகளையும் 
முட்டாளாக்கி 
அறிவுசாளிகளையும் 
அடுத்தபக்கம் 
திருப்பி 
புதினம் பார்க்கும் 
அட்டகாசமனிதன் 
இவனிடத்தில் ஏமாறுபவர்கள் 
ஏராளம் 
அதற்கு 
நான் 
பொறுக்கி அல்ல 
பொறுமையுடன் உள்ளவன் 
நீ  செய் .......
உன்னால் முடிந்த 
அட்டகாசம் 
எல்லாவற்றையும் 
செய் 
உனக்கு  முடிவு 
என்பது 
மட்டும் நிட்சயம் 
அது 
தொலைவில் இல்லை 
அப்போது  காவிகளும் 
உன்னை  காக்க முடியாமல் 
போய்விடும் 
உனக்கு 
ஐயோ ... ஐயோ.... ஐயோ 

அன்புடன் 
உங்கள் கல்மகன் 
கவிஞர் 
டேவிட் 




பருவக் கோளாறு




காதல்  (மோகம்)
என்பது 
ஒரு  பருவக் கோளாறு 

இது 
அநேகருடைய 
வாழ்வை கெடுத்த 
கேன்சர் 
நோய் போன்றது 

இந்த நோயை  (காதலை )
கண்டுபிடிக்க 
தெரியாத  காலமதில் 
இவ் .. நோயை 
புனிதம் ...  உண்மை 
என்றெல்லாம் பலவாறு 
வர்ணனை கொடுத்து 
வண்ணாத்தி  பூட்சி 
விடுவர் 

அவளும் மோகம்  கொண்டாள் 
காதல் கொண்டாள் 
காதலை விட  அனைத்தும் 
மாயை என்றான் 
உயிராக  எண்ணினர் 

இருவரது மோகமும் 
காதல் என்பதை 
மோதிய  பின் தான் 
தெரிய வந்தது 

நல்லவேளை 
முழ்காமல் போய்விட்டாய் 
என்று கூறிய வார்த்தைகள் 
நினைவுக்கு  வந்தது 

ஆண்டவரை  காதல் செய்யுங்கள் 
அருள் தருவார் 
அக்கா - அண்ணன் - தங்கை - தம்பி 
அம்மா - அப்பா 
அனைவரையும் அன்பு செய்யுங்கள் 
ஆறுதல் கிடைக்கும் 
பருவக் கோளாறு எனும் 
மோகம் கொண்டு 
காதல் என நினைத்து 
குழம்பிப் போய் 
கலங்கி விடாதீர்கள் 


உங்கள்  கல்மகன்
கவிஞர் 

டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி






கடமையும்

  
மனைவி 

மனைவிகளை விட்டுவிடுங்கள் 
தனிமையாய்  இருப்பதே 

புருசகர்களுக்கு நலம் 

என பறை சாற்றுபவர்களும் 

கணவன்மார்களை 

துரத்திவிட்டு 

தனித்து வாழ்வதே 

நலமான  வாழ்வு 

என வாழ்பவர்களும் உண்டு 


நம்மில் பலர்க்கு புரிந்தது 

பல ஆன்மிகவாதிகளும் 

சில நாஸ்தீகவாதிகளும் 

 இறுதியில் தத்தம் கொள்கையை 

மாற்றிய சம்பவங்கள் 

யாம் அறிந்த  உண்மைகள் 


எமக்கு நன்கு அறிந்த 

பகுத்தறிவு  பெரியார் கூட 

முதிர் வயதில் 

திருமணமாகி  இன்புற்றார் 


இருமனம் கலப்பதே 

திருமணம் 

தத்தம் கொள்கைகளை 

எடுத்து சொல்வது 

அவரவர் அறிவும் 

கடமையும் கூடவே


 புருசர்களே 
மனைவியை 
அரவணையுங்கள் 
அன்பு செலுத்துங்கள் 

                               
உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி



Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts