அகதி - நாடிழந்தவர்
குனிந்த வாழ்வு
குடியேறிய
பரதேசி வாழ்க்கை
சகல நாட்டிலும்
பரிதாபம் ...........
சுமை கலந்த வாழ்வு
பிறந்த நாட்டைவிட
புகுந்த நாட்டில்
வாழ்ந்த காலங்கள்
அநேகம் ............
ஆயிரம் ஆயிரம் வாழ்கை கனவுகளை
சுமந்த எனக்கு
யுத்தம் என்னும் கொடூரத்தால்
சத்தம் இல்லாமல் என் கனவுகளும்
தொலைந்து விட்டது ...............
பரதேசி வாழ்வில்
பிறந்த நாட்டுக்கா
புகுந்த நாட்டுக்கா
நான் சொந்தக்காரன் ...........
கண் அயரும் நேரமதில்
கனவுகளும் மீண்டும் வந்தாலும்
காலமும் வயதுகளும் கடந்து
வாலிபமும் மறைந்து விட்டது ..
மன வலிகள் அதிகரித்து
மன உளட்சல் பெருக்கெடுத்து
அங்கும் இல்லாது இங்கும் இல்லாது
ஊஞ்சல் ஆடும் என் உள்ளம்
யாரறிவார் ?
சொந்த நாடு சுகமாய் இருந்தால்
கூனி குறுகி குனிந்த வாழ்வு
எந்த நாட்டிலும் எனக்கு
அவசியம் இல்லை .........
நாடு நாடாய் அலைந்து திரிந்து
நிம்மதி என்ற பெயரில்
ஓரிடம் நிலைத்து வந்தாலும்
வாழ்வும் ஒரு சாவே ..........
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen