கல்மகன் கவிதைகள்
மலர்ந்தும் மலராத மலர்கள்அழகும் அதன் நறுமணமும்
கரங்களுக்கு ஒத்துவரும்
கண்கவரும் வண்ண கற்கள்
இந்த
மலர்கள்
நிட்சயமாக
மரியாதைக்கு உரிய மலர்கள்
இந்த கரங்கள்
சுமந்து செல்லும்
மலர்கள் யாருக்காக ?
எதற்காக ?
கரங்களின் அழகும்
மலர்களின் இயற்கையும்
ஆண்டவன் படைப்பில்
அதிசயம்தான்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen