உதறி தள்ளி விடு
உன் இயலாமையை
ஒரு போதும்
உதாசீனம் செய்ய மாட்டேன்
காரணம்
உன்னையையும் படைத்தவன்
இறைவன்
உன் இயலாமையில்
கூட
நீ
மற்றவர்களை
இழிவாய்
நினைப்பதும்
செயல்படுவதுமே
ஜீரணிக்க முடியாத
காரண காரியம்
இழிவான மலிவான
நடத்தைகளை
உதறி தள்ளிவிட்டு
உன் இயலாமையில்
கூட
மற்றவர்களை
இனிமேலாவது
இழிவாய்
நினைத்து விடாதே
நிறைவாய் இரு
நேர்மையாய் இரு
திறமையை காட்டு
விரிவாய்
செயல்பாடு
பிள்ளைகளை வளர்ப்பதுவும்
கடமைகளை
செய்வதுவும்
கஷ்டமான
காரியங்கள்தான்
இவ் புவிதனில்
கடைசி கால
உலகமாய் விரிவு
அடைந்து
பரவுவதால்
வீணான
காரியங்களும்
இந்த
மண்ணில் அதிகம்தான்
மரியாதையை
கேட்டாலும்
தராத காலம்
மரியாதைக்கே
அர்த்தம்
இல்லாமல் போனதும்
இக்காலம்
வரும் காலங்கள்
எப்படி இருக்குமோ
வாழ்பவர்கள் /
வாழ்ந்தபவர்கள் /
வாழப்போகும்
மனிதர்களுட்கும்
புரியும் அறியும்
தெரியும்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட்
முளைத்து வருகின்றது
யார் எதை என்னத்தை சொன்னாலும்
எனக்குள் வாழும்
என் நம்பிக்கை ஒரு நாளும்
வீண் போகவே போகாது
என் நம்பிக்கை என்பது
ஒரு விதை போன்றது
நட்டு விட்டேன்
முளைத்து வருகின்றது
ஒருநாள் துளிர்த்து
பூத்து குலுங்கும்
அத்துடன் சேர்ந்து வரும்
வாசனை என்னும் நறுமணம்
முகர்ந்து மகிந்திடலாம்
என் நம்பிக்கை வீண்
போகவே போகாது
நம்பிக்கையால்
காத்திருக்கின்றேன்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி