என் விழிகள்
மயங்கி விடாது
ஒரு நாளும் தூங்காது
நான் ...
துயரமான போதும்
துணிவாய் இருக்கும்
என்னை யார் என
அறியாமல் பேசுவது
நீ தூற்றுவது
நீ இன்னும் ....
தெய்வத்தை அறியவில்லை
உனக்கு இன்னும்
அறிவு வளரவில்லை
என்பதுதான் உண்மை
நான் இருக்கும் வரையிலும்
என் விழிகள்
என்னோடு கூடவே
இருக்கும்
என் விழிகள்
மயங்கி விடாது
ஒரு நாளும் தூங்காது
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயந்தன் அப்புக்குட்டி
