கடல் கடந்து வந்த
சாமியார்
குடும்ப பக்தர்களை
சந்திக்க வந்தாராம்
நீண்டகாலம்
லங்காவுக்கு வராததால்
பலரை கண்கலங்க வைத்த
கடற்கரை சாமியாரோடு
இணைந்த பாசம் வெளிப்பட்டதாம்
கரும்பு சாமியார் இடம் கொடுக்க
கடை சாமியார் புதினம் பாத்தாராம்
அட என்னடா என
ஆஸ்பத்திரி சாமியார் அதிர்ந்து போக
கரும்பு சாமியார் இரும்பாகி போனாராம்
வாழ்வும் இல்லை
சாவும் இல்லை என்றாராம்
வளர்ந்த சாமியார்
அட ஆண்டவன் படைப்பில்
இப்படியும் அதிசயங்கள்
கடல் கடந்து வந்த சாமியார்
சட்டு சுட்டன்று
கடுகதி பஸ் எடுத்து பறந்தாராம்
வடையை காக்கா கொண்டுபோய் விட்டதாம்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen