பல தோல்விகளை
கஷ்டமாக
கடந்து வந்தவன்
சில வெற்றிகளை
இலேசாக
ஜெயமாக கொண்டவன்
என் வாழ்வில்
தோல்விகளை
வெற்றியின்
படிக்கட்டுக்களாகவும்
பள்ளிக்
கூட
புத்தகங்களாகவும்
புரிந்து கொண்டவன்
என் பாதை
சரியான
பாதை தான்
அதை
உணர்ந்து
கொள்ளும்
காலம்
ஒரு நாள் வரும்
நீ
உன் கண்களால்
ஒரு நாள் பார்ப்பது
நிட்சயம்
நான் மெதுவாக ஓடினாலும்
அதை
சிலர் அதைக் கண்டு
வேகமாக
ஓடுகின்றனர்
நடப்பது
என்ன என்பதை
முன் கூட்டிய
முற்றாக
சொல்லி விட்டேன்
த ம்பி
பல புயல்களை
கடந்து வந்தவன்
வெற்றி
என்பது
என் வாழ்வில்
நிட்சயம்
யாருக்காகவும்
யாரையும்
வெறுக்காதவன்
அநீதிக்கு துணை போவர்களை
கண்டிப்பவன்
திருந்தாவிட்டால்
என்பாதை
தனிப்பாதை
என்பதை பல தடவை
பகிரங்கமாக
சொல்லியும் உள்ளேன்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen