சுதந்திரம்
ஒவ்வொரு மனிதனுக்கும்
உரிமையும் சுதந்திரமும்
உணர்வுகளும் உணர்சிகளும்
தாயின் கர்ப்பத்தில் தொடங்கிய
தொடக்கமே !
ஆனால்
எமக்கு மட்டும்
உரிமையும் சுதந்திரமும்
மறுக்கப்படுகின்றன !
காலம் பதில் தருமா ?
இந்தக்கேள்வி
எனக்கு மட்டும் இல்லை
இவ்
உலகில் வாழும்
நம்மில் அநேகருக்கு
அன்புடன்
கவிஞர்
கவிஞர்
கல்மகன் டேவிட்
.........................................................................
நம்பிக்கை
உங்களது விடா முயற்சியும்
தொடர் நம்பிக்கையும்
எனக்கு
புதிய மகிழ்வை
தெரியப்படுத்துகின்றது
ஒன்றுபட்டால்
திடம் கொண்டு பலம் கொண்டு
வாழலாம்
பெரிய சாதனைகளை
சாதிக்கலாம்
காத்திருக்கின்றேன்
அந்தநாள் நினைவாக
என்றும் அன்புடன்
கவிஞர்
கவிஞர்
உங்கள் டேவிட் (கல்மகன் )
உணர்வுகள்
இவள் கண்டது புதுமையா
அல்லது
அவளைப்போல நானும்
இல்லையே
என்பதான உணர்வா?
சிவந்த அண்டவெளி
ஆங்காங்கே
பரந்து கிடக்கும்
நட்சத்திர கோள்கள்
அதன் நடுவில்
அழகான கண் மண்டலம்
இது என் வர்ணணை
இவள் எல்லாமே மறந்து
ஆற்று நீர்
ஓரத்து மரத்து மேல்
ஏறி நின்று
எல்லா உணர்வுகளை வெளிப்படுத்தும்
மேலான உணர்வுகள்
சில வேளைகளில்
மிருகங்கள்
உற்ற நண்பர்கள்
மிருகங்களுக்கும் உணர்வுகளும்
உண்டு என்பது
நிட்சயமான உண்மை
அம்மா உடன் வீட்டில்
இருந்து பழக்கப்பட்ட
உணர்வு
ஆரம்ப
பாடசாலைக்கு முதல் நாள்
போகமுன்
அழாமல்
எப்படித்தான் இருக்க முடியும்
பாசமுள்ள மகன்
உணர்வுகள் இப்படித்தான்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
......................................................................................
காலமே
நீ கேட்க வேண்டிய
நீ கேட்க வேண்டிய
கேள்விகளை
கேட்க தவறி
தட்டு தடமாறி
பின் கதவால்
தூரத்தில் நின்று
இன்னொரு
வரின் மூலம்
குரல்வவளையோடு
நின்று நீ
குறிப்பதுவும்
ஏன் ?
கனவோ உன்னோடு
சேர்ந்து நான்
நடக்க முடியுமோ ?
என் காதலனை
கண்டு பிடித்து
தருவாயோ?
என கனவு கானுவதுவும் ஏன்
என கனவு கானுவதுவும் ஏன்
உங்கள் கல்மகன்
கவிஞர்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
கதறுகிறதே
என் ஆத்தமா
கலங்கியே
நிக்கின்றேன்
பாதியில்
பிரிந்துவிட்டேன்
பதறுகின்றதே
என் உள்ளம்
பரிந்திடுவாயா
பரணியில் எனக்கு
உங்கள் கல்மகன்
கவிஞர்
பரிந்திடுவாயா
பரணியில் எனக்கு
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
---------------------------------------------------------------------------------------------
சீக்கிரமாய்
பல ஆண்டுகள்
என் காதலனை தேடி
காத்திருந்தேன்
வீதியெல்லாம்
தேடி திரிந்தேன்
இரவு காலத்தில்
இருளான நேரமதில்
நாளாப் பக்க
நாளாப் பக்க
நகர் புறமெல்லாம்
நடந்து அலைந்து
கண்கண்ட
நடந்து அலைந்து
கண்கண்ட
காவலர்கள்
எல்லோரிடமும்
கேட்டு கேட்டு
அலறி திரிந்தேன்
அலறி திரிந்தேன்
காணவில்லை
என சொன்னவர்களின்
நம்பகம்
நான் அறியேன்
படித்து படித்து
சொன்னேன்
பகல் நேரமெல்லாம்
உழைத்து உழைத்து
சொன்னேன்
பதறாமல் சொன்னேன்
இரவு பகல்
பாராது
கதறி கதை
சொன்னேன்
மீட்ட்டுக்
கொள்
உன் ஆத்மாவை
என்றும் சொன்னேன்
இப்போ நீ
சிக்கிக் கொண்டு
மாட்டிக்
கொண்டாய்
சீக்கிரமாய் மனம் திரும்பு
அல்லது போனால்
சிதறி
சின்னாபின்னமாகி
விடுவாய்
உங்கள் கல்மகன்
கவிஞர்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
http://poemofdavid.blogspot.ch/
Keine Kommentare:
Kommentar veröffentlichen